குடிபோதையில் வாகனம் ஓட்டி, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கடுமையான உத்தரவுகளும்

குடிபோதையில் வாகனம் ஓட்டி, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கடுமையான உத்தரவுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மதுபோதையால் ஏற்படும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை தீர்ந்தபாடில்லை.

இதனால் போலீசார் நாட்டிலுள்ள அனைத்து சாலைகளில் ரோந்து பணிகளில் ஈடுபடுவதையும், வாகன தணிக்கையை செய்வதையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. மதுபோதையில் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் விதிகளை வகுத்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மது அருந்திவிட்டு வாகன ஓட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் போலீசார் பணம் பறித்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கு போலீசாரிடம் பிடிப்பட்ட வாகன ஓட்டிகள் மது அருந்தவில்லை என்று தெரியவந்துள்ளது.