ரூ. 12 லட்சம் மதிப்புடைய பைக்கில் முகமூடியுடன் வலம் வரும் பிரபல நடிகர்..!

பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல நடிகர் புதியதாக வாங்கிய பிஎம்டபுள்யூ எஃப்750 ஜிஎஸ் பைக்கில் முகமூடியுடன் வலம் வரும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. அவர் யாரென்று பார்க்கலாம்.


இந்தியாவில் விற்பனையாகும் பைக்குகளில் விலையுயர்ந்த மாடலாக விளங்குவது பிஎம்டபுள்யூ எஃப்750 ஜிஎஸ் பைக். இதனுடைய தொடக்க விலை ரூ. 11.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) விலையாகும்.


மேலும், இதனுடைய உயர் ரக வேரியன்டுக்கு ரூ. 13 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம், மதிப்பிலான விலையாகும். பல்வேறு பைக் ஆர்வலர்களின் விருப்பத் தேர்வாகவுள்ள இந்த பைக், பெரும்பாலான திரை பிரபலங்களையும் கவர்ந்துள்ளது.

பாலிவுட் சினிமாவில் பல்வேறு துணை கதாபாத்திரங்களில் நடித்து, முன்னணி இடத்தை தக்கவைத்துள்ள அர்ஷத் வார்ஸி புதிய பிஎம்டபுள்யூ எஃப்750 ஜிஎஸ் பைக்கை சொந்தமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

நவம்பர் 23ம் தேதி இந்த புதிய பைக்கை அவர் வாங்கியுள்ளதாகவும், அதை ஓட்டும் போது புத்துணர்வு ஏற்படுவது என்றும் தனது இஸ்டா பதிவில் அர்ஷத் வார்ஸி கூறியுள்ளார். இதனால் அவர் பிஎம்டபுள்யூ எஃப்750 ஜிஎஸ் பைக்கை வாங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.